பரசூட் பயிற்சியின் போது விபத்து!


மானப்படை முகாமில் முன்னெடுக்கப்பட்ட பரசூட் பயிற்சியில் இடம்பெற்ற விபத்தின்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

அம்பாறை - உகண பகுதியில் உள்ள விமானப்படை முகாமில் முன்னெடுக்கப்பட்ட பரசூட் பயிற்சியின்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் 34 வயதுடைய விமானப்படை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று காலை 8 மணியளவில் இந்த சம்பம் இடம்பெற்றுள்ளதாகவும் 8 ஆயிரம் அடிக்கு மேல் பரசூட்டில் இருந்து விழும் போது இந்த அனர்த்தம் நேர்ந்ததாகவும் விமானப்படை குறிப்பிட்டுள்ளது.

8 ஆயிரம் அடி உயரத்தில் இரு பரசூட் வீரர்களும் சிக்கிக்கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.