சீனாவின் கட்டுப்பாட்டில் இலங்கையின் மற்றுமொரு பகுதி!


சிங்கராஜ வனத்துக்குள் இரண்டு பாரிய நீர்நிலைகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ , இதற்காக சீன நிறுவனத்துடன் இணைந்து திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்ட மாவட்டத்தின் தங்காலை, வீரகெட்டிய மற்றும் பெலியத்த பிரதேசங்களுக்கு குடிநீர் பெற்றுக் கொள்ளும் முகமாக இந்த திட்டம் செயற்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இத்திட்டம் தயாரிக்கப்பட்டு சீன நிறுவனத்திற்கு ஒருதொகை நிதியும் வழங்கப்பட்டிருந்ததாகவும் கடந்த ஐந்து வருடங்களில் அது செயற்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்த அமைச்சர், அத்திட்டத்தை மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சிங்கராஜ வனத்திற்குள் ஒரு நீர்நிலை சுமார் 5 ஏக்கல் நிலத்தில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்த அமைச்சர் , அதுபோல இரண்டு நீர்நிலைகள் அங்கு அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இதன்போது இடம்பெறும் வன அழிவுக்கு பதிலாக 50 தொடக்கம் 100 ஏக்கரில் மரம் நடுவதற்கு தாம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.