கனடாவில் உள்ள இலங்கை யானையை விடுவியுங்கள்!




இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட லுாசி என்ற யானை, கனடாவின் மிருகக்காட்சி சாலையில் மோசமான சூழலில் வாழ்ந்து வருவதாக கொழும்பிலிலுள்ள கனடா தூதரகத்தில் மனு ஒன்று தேரர்கள் சிலரால் கையளிக்கப்பட்டது.

1977 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்டலூசி என்ற யானை, இப்போது கனடாவின் எட்மண்டன் மிருகக்காட்சிசாலையில் சரியான வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருவதாக அந்த மனுவில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இலங்கை ரமண்ய நிகாயவின் தலைமை மகாநாயக்கர் ஓமல்பே சோபித நா தேரர் தலைமையிலான போராட்டக்காரர்கள், கொள்ளுப்பிட்டியிலிருந்து கனேய உயர் ஸ்தானிகராலயம் வரை சென்று இந்த மகஜரை கையளித்தனர்.

1977 ஆம் ஆண்டில் சிறிய யானைக்குட்டி, தேசிய விலங்கியல் துறையால் ஒரு ஜெர்மன் தொழிலதிபருக்கு விற்கப்பட்ட பின்னர், அவரால் கனடிய மிருகக்காட்சிசாலைக்கு 9789 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டதாக சோபித தேரர் தெரிவித்தார்.

இந்நிலையில் யானை இப்போது தனக்கு பொருந்தாத, கொங்கிரீட்டால் சூழப்பட்ட ஒரு குளிர் சூழலில் வாழ்ந்து வருவதாகவும், 44 ஆண்டுகளாக பரிதாபகரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்த லூசி, சுதந்திரமான சூழலைப் பெற வேண்டும் என்றும் தேரர் வலியுறுத்தினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.