வவுனியாவில் நுண்கடன் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!


நுண்கடன்கம்பனிகளிடம் சித்திரவதைபடும் பெண்களின் கடன்களை அரசே தள்ளுபடி செய்யவேண்டும் எனகோரியும், அதற்கு ஆதரவாக கிங்குராங்கொடையில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் சத்தியாக்கிரகபோராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வவுனியா மாவட்டசெயலகத்திற்கு முன்பாக  ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை)முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வடக்கு மாகாண மக்கள் திட்டமிடல் மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த  ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. இதன்போது கருத்துதெரிவித்த ஆர்பாட்டகாரர்கள் ,

நாடுபூராகவும் 28இலட்சம் பெண்கள் நுண்நிதி கம்பனிகளின் கடன்சுமையில் சிக்கிதவிக்கின்றனர்.குறித்த கம்பனிகள் அதிகளவு தண்டபணத்தினையும்,வட்டியினையும் அவர்களதுதலையில்விதித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பெண்கள் பலர் தற்கொலைசெய்தும் பல இலட்சம் பெண்கள் தற்கொலை செய்யும்நிலையிலும் இருக்கின்றார்கள்.

எனவே நின்மதியை இழந்து நித்திரையை இழந்து தவிக்கும் எமது பிரச்சினையை அரசு தீர்கவேண்டும். பாரியகம்பனிகளுடைய நஸ்டஈடுகளை அரசு பொறுப்பேற்கும் போது முறையற்றவிதத்தில் வழங்கபட்ட இந்தகடனை மட்டும் ஏன் அரசால் தள்ளுபடி செய்யமுடியாது.வறுமையை ஒழிப்பதற்காக அரசினால் உருவாக்கபட்ட நுண்கடன் கம்பனிகள் இன்று பெண்களையே வறுமையில் வாடசெய்துள்ளது.

நாம் வாக்குபோட்ட அரசியல் வாதிகள் என அனைவரும் எம்மை கைவிட்டநிலையில் நுண்கடன் கம்பனிகளின், வசைபாடல்களிற்கு இன்று இரையாகியுள்ளோம். கிராமங்களிற்குள் மோட்டார்சைக்கிள் வந்தாலே நாம் பயந்து ஒழியவேண்டிய நிலைக்கு தள்ளபட்டுள்ளோம்.எனவே எமது கடன்கள் அனைத்தையும் அரசு தள்ளுபடிசெய்யவேண்டும். என்றனர்.

ஆர்பாட்டத்தில் பெருமளவான பெண்கள், கலந்துகொண்டிருந்ததுடன் அரசிற்கெதிராக கோசங்களை எழுப்பியிருந்ததுடன் பதாதைகளையும் ஏந்தயிருந்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.