மஹிந்தானந்த அளுத்கமகேக்கும் சட்டத்தரணி சுகாஸிற்கும் இடையே வாய்த்தர்க்கம்!


அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேக்கும் சட்டத்தரணி சுகாஸிற்கும் இடையே வாய்த்தர்க்கம் நேற்று இடம்பெற்றது .


நியமனத்தை கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதார தொண்டர்கள் போராட்டத்தில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே - சட்டத்தரணி சுகாஸ் இடையில் வாய்த்தர்க்கம் உருவாகியிருக்கின்றது.

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சுகாதார தொண்டர்களை கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுகாதாரத் தொண்டர்களுடன் கலந்துரையாடினார்.

அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர், தான் ஜனாதிபதியை சந்தித்து கதைப்பதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும், அதற்கு இரு வார கால அவகாசம் கொடுக்க வேண்டுமென குறிப்பிட்டார்.

இச்சந்தர்ப்பத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி சுகாஸ் சுகாதாரத் தொண்டர்களுக்கு ஆதரவு தெரிவித்து கடிதங்களை அமைச்சருக்கு சமர்ப்பித்திருந்தார்.

சுகாஸின் கருத்துக்களினால் ஏற்பட்ட முரண்பாட்டினால் நீங்கள் இங்கே அரசியல் செய்ய வேண்டாம். வாயை மூடுங்கள் என மஹிந்தானந்த தெரிவிக்க,

சுகாசும் நீங்கள் வாயை மூடுங்கள் என கூறினார். இதனால் அமைச்சரின் பாதுகாப்பு பிரிவினர் சுகாசை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களில் சிலர் அமைச்சரின் கால்களில் விழுந்து தமது பிரச்சினையை தீர்க்க கோரினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.