உதயநிதி சொத்து மதிப்பு குறித்து விபரம் வெளியானது!


சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. வேட்பாளர் உதயநிதி ஸ்டலின் வேட்பு மனுவில் அவரது சொத்துக்கள், வருமான விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதி பெயரில் 21 கோடியே 13 இலட்சத்து ஒன்பதாயிரத்து 650 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், 6 கோடியே 54 லட்சத்து 39 ஆயிரத்து 552 ரூபாய் மதிப்பில் அசையாச் சொத்துக்களும் உள்ளன.

உதயநிதியின் மனைவி கிருத்திகா பெயரில் ஒரு கோடியே 15 லட்சத்து 33 ஆயிரத்து 222 ரூபாய் மதிப்புக்கு அசையும் சொத்துக்கள் உள்ளன.

கடந்த நிதியாண்டில் உதயநிதியின் மொத்த வருமானம் 4 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் என்றும் அவரது மனைவி கிருத்திகாவின் வருமானம் 17 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுமக்களுக்கான போராட்டங்களின் போது சட்டங்களை மீறியதாகப் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் உதயநிதி மீது 22 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.