ஈழத்து பெண்களின் வாழ்வுக்காக நீதி கோரல் -பேர்லின்!📸

 பன்னாட்டு பெண்கள் மத்தியில் ஈழத்து பெண்களின் வாழ்வுக்காக நீதி கோரல் -பேர்லினில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் தினம் முன்னெடுக்கப்பட்டது. 


மார்ச்-8, 1857 - அன்று முதல் உலகமெங்கும் பெண்கள்  தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 -ம் தேதி கொண்டாடப்படுகிறது.

பெண்களுக்கான சமத்துவமும், அங்கீகாரமும் அவர்களுக்கு மட்டுமன்றி மொத்த மானுடத்திற்கே நன்மை பயக்கும் என்று சான்று பகரும் நாளே பன்னாட்டு பெண்கள்  தினம் .

சமூகம், அரசியல், பொருளியல் போன்ற துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக இந்த நாள் உருவெடுத்துள்ளது.


அந்தவகையில் பன்னாட்டு பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் 06.03.2021 அன்று யேர்மன் தலைநகரில் நடைபெற்ற பேரணியில் தமிழ் பெண்கள் அமைப்பு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு  பிரதிநிதிகளும் கலந்துகொண்டு  தமிழீழப் பெண்களுக்காக உரிமைக்குரல் எழுப்பினர்.


பெண்களின் சுதந்திரத்திற்காகவும் சுயநிர்ணயத்திற்காகவும் நடைபெற்ற பேரணியில் தமிழ் பெண்கள் அமைப்பின் சார்பில் இடம்பெற்ற உரையில்  , தமிழீழத்துப் பெண்கள் மிகவும் கொடூரமான இராணுவ ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றார்கள் என்றும்  தமிழீழப் பெண்களின் வாழ்வு இன்று சிங்களப் பேரினவாத அரசால் திட்டமிட்டுச் சிதைக்கப்படுகிறது என்றும் அத்தோடு போரினில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட  தமது பிள்ளைகளை மற்றும் கணவன்மார்களை தேடி  நூற்றுக்கணக்கான தமிழீழ பெண்கள் பல வருடங்களாக வீதிகளில் போராடி வருகின்றார்கள் , மற்றும் இன்றைய நாட்களிலும் லண்டனில் வாழும் தமிழ் பெண், அம்பிகா செல்வகுமார் அவர்கள்  தமிழீழ மக்களின் விடுதலைக்காக சாகும்வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் 8 வது நாளாக  ஈடுபட்டுக்கொண்டு  இருக்கின்றார் என்றும் குறிப்பிடப்பட்டது.


கொரியா பெண்களின் விடுதலைக்காக அமையப்பெற்றுள்ள நினைவுத்தூபிக்கு  அருகாமையில் ஆரம்பிக்கப்பட்ட  பேரணி அண்மித்துள்ள வீதிகளிலால்  நகர்ந்து சென்று மீண்டும் நினைவுத்தூபிக்கு  முன்பாக சென்றடைந்து இறுதி நிகழ்வை எட்டியது.


கடந்த சில ஆண்டுகளில், பெண்களால் முன்னெடுக்கப்படும் பல்வேறு சமூக போராட்டங்கள் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை நம்மால் பார்க்க முடிகிறது.உலகெங்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடக்கிறது என்பதை எடுத்துக்கூறும் விதமாக இது இருந்தது.இதில் உலகின் பல நாடுளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துகொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினார்கள் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.