அடுத்தமுறை கோட்டாபயவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது!
இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகளுள் அதிகளவு சிங்கள பௌத்த வாக்குகள் பெற்று பதவிக்கு வந்தவர் கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரமே என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
எனினும் அடுத்தமுறை கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு அந்த வாக்குகளைப் பெற எவ்வித வாய்ப்புக்களும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்
அதனால் அடுத்த தேர்தலில் வெற்றிபெற சிறுபான்மை மக்களின் வாக்குகள் அவசியம் எனவும் அதன் காரணமாகவே முஸ்லிம் மக்களுக்கு தேவையான வகையில் நாட்டில் சில தீர்மானங்கள் மாற்றி அமைக்கப்படுவதாகவும் ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை