நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

 


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் மட்டக்களப்பு – காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகார பிரிவிற்கு உட்பட்ட சில பகுதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன என கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மொஹினார் ஒழுங்கை, காபுர் வீதி, சின்னதோன வீதி, ரெலிகம் வீதி, முதலாம் குறுக்கு தெரு என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.