தொடர்ந்தும் ஐரோப்பாவினை அச்சுறுத்தும் கொரோனா!
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்சில் 39 இலட்சத்து 32 ஆயிரத்து 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 23 ஆயிரத்து 302 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 316 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, ஜேர்மனியில் 25 இலட்சத்து 20 ஆயிரத்து 609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 06 ஆயிரத்து 841 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 401 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோன்று இத்தாலியில் 31 இலட்சத்து ஆயிரத்து 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 19 ஆயிரத்து 749 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 376 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை