ஜான்சன் & ஜான்சனின் தடுப்பூசியை பயன்படுத்த ஆலோசனை!

 


அமெரிக்காவில் அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஜான்சன் & ஜான்சனின் தடுப்பூசியை இலங்கையிலும் பயன்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.

ஒருதடவை மட்டும் செலுத்தப்படும் குறித்த ஜான்சன் & ஜான்சனின் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இது அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மூன்றாவது தடுப்பூசியாகும்.

ஜான்சன் & ஜான்சனின் தடுப்பூசி செலவு குறைந்ததாக உள்துடன், உறைவிப்பானுக்கு பதிலாக குளிர்சாதன பெட்டியில் சேமிக்க முடியும்.

இருப்பினும், ஜான்சன் & ஜான்சன் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் கோரும் விண்ணப்பத்தைப் பெறவில்லை என்று தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் கமல் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.