விபத்தில் கஜகஸ்தான் பிரஜை காயம்!


 தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அபரேக்கவிற்கும் பெலியட்ட பரிமாற்றத்திற்கும் இடையில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் கஜகஸ்தான் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.

தனியார் வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் லொறியுடன் மோதுண்டே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் தற்சயம் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பியூலன்ஸ் வாகனம் குறித்த வெளிநாட்டவரை கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையிலிருந்து மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்திற்கு கொண்டு சென்றபோதே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும் அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.