இராணுவத்தளபதி வெளியிட்ட செய்தி!

 


கொரோனா வைரஸ் மரணங்களின் போது சடலங்களை தனியான தீவுகளில் அடக்கம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேவேளை மரணம் இடம்பெற்று 48 மணித்தியாலங்களுக்குள் அடக்கம் செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்றைய தினம் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவிக்கையில்;

கொரோனா வைரஸ் மூலமான சடலங்களை நாட்டின் மத்தியிலுள்ள நிலப்பரப்பில் அடக்கம் செய்யப்பட மாட்டாதென்றும் தனியான தீவுகளிலேயே அடக்கம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கான வழிகாட்டல்கள் தயாரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதனையடுத்து அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட வுள்ளதாக தெரிவித்துள்ள அவர், எவ்வாறாயினும் 48 மணித்தியாலங்களுக்குள் சடலத்தை அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.