இவ்வருட இறுதிக்குள் அனைவருக்கும் பிறப்புச் சான்றிதழ்!

 


பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத அனைவருக்கும் இவ்வருட இறுதிக்குள் அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கம்புறுப்பிடிய தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் அங்குகருத்துத் தெரிவிக்கையில்,

தேசிய அடையாள அட்டை இல்லாத அதிகமானோர் உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் காலம் நெருங்கும் போதுதான் அடையாள அட்டை நினைவுக்கு வரும்.

அதன்போது கிராம அதிகாரிகளிடம் சென்று தற்காலிக அடையாள அட்டைகளைப் பெற்று வாக்களித்துவிட்டு மீண்டும் மறந்துவிடுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத பல்லாயிரக்கணக்கானோர் இப்பகுதியில் உள்ளனர். பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத அனைவருக்கும் இவ்வருட இறுதிக்குள் அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.