எலிசபெத் மகாராணியின் பிறந்தநாள் கொண்டாட்டம் இரத்து!


 கொரோனா தாக்கம் காரணமாக இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பிறந்த நாள் கொண்டாட்டம், தொடர்ந்து 2 ஆவது வருடமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 95 ஆவது பிறந்த நாள் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வருகிறது.

மகாராணியின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி இலண்டனில் 1,400 படைவீரர்கள், 200 குதிரைகளுடனான அணிவகுப்புடன் மிகச்சிறப்பான கொண்டாட்டம் நடைபெறுவது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பொது முடக்கம் அமுலில் இருந்ததால் இந்த கொண்டாட்டம் இரத்தானது. வின்ட்சார் கோட்டையில் எளிமையாக மகாராணியின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது.

இந்த ஆண்டும் கொரோனா காரணமாக மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பிறந்த நாள் கொண்டாட்டம், இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவலை பக்கிம்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.