ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் ஊரடங்கு!


 கொரோனா பரவல் அதிகரிப்பால் ரஷ்யா, பிரான்ஸ், போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

முதலில் இங்கிலாந்தில் மரபணு மாற்றமடைந்த கொரோனா பரவியது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்நாட்டில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதேபோல் மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்  ஏனைய  ஐரோப்பிய நாடுகளிலும் பரவியது.

பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகரித்தன.

இதனால் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

மக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

பிரான்ஸ் நாட்டில் 15 நகரங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பாரிசில் அத்தியாவசியம் இல்லாத கடைகள் ஒரு மாதத்துக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

போலந்து நாட்டிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு அடுத்த மூன்று வாரங்களுக்கு கடைகள், ஓட்டல்கள், சினிமா தியேட்டர்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.