இரண்டாவது நாளாக தொடர்கிறது தி.மு.கவின் நேர்காணல்!
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இரண்டாவது நாளாக இன்று (புதன்கிழமை) நேர்காணல் நடைபெறுகிறது.
கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணலை நடத்தி வருகின்றனர். குறித்த நேர்காணல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
திமுகவின் விருப்ப மனு கடந்த 17ஆம் திகதி தொடங்கி 28 ஆம் திகதிவரை நடைபெற்றது. இதில் 8 ஆயிரத்து 388 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன. 7 ஆயிரத்து 967 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இவர்களுள் சுமார் 7 ஆயிரம் பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் சுமார் 1400 பேர் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை