அச்சத்தில் இரணைதீவு மக்கள்!

 


மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரணைதீவு பகுதியில் கொரோனா வைரஸினால் மரணித்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளைமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சுமார் 360க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இரணைதீவு பகுதியில் மக்களின் அனுமதியோ அல்லது பொது அமைப்புக்களின் ஆலோசனைகளோ இன்றி கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய கல்லறைகள் அமைக்கப்பட்டு கொடிகள் நாட்டப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நடவடிக்கையானது மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளதாகவும் மதம் சார்ந்து அல்லாமல் ஒவ்வொறு மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே இரணைதீவு பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளை எதிர்ப்பதாகவும் அந்த மக்கள் தெரிவித்தனர்.

எனவே அரசாங்கம் இம் முடிவை மீள் பரிசீலனை செய்து மக்கள் நடமாட்டம் அற்ற தீவுகளை தெரிவு செய்து அவ்வாறான பகுதிகளில் சடலங்களை அடக்கம் செய்ய முனைய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பல போரட்டங்களுக்கு மத்தியில் மீள் குடியேறி வாழ்வாதாரத்தை கொண்டுசெல்லும் இரணை தீவு மக்கள் வசிக்கும் பகுதிகளில் இவ்வாறன செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் கக்கட தீவு பகுதியிலும் குழிகள் தோண்டப்பட்ட நிலையில், நீர் வெளிவந்த காரணத்தினால் அப்பகுதியில் குழிகள் தோண்டும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.