தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை!

 அ.தி.மு.க. அரசு தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை நிறைவேற்றி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், தி.மு.க. ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம் 435 அரசு பாடசாலையில் மாணவ மாணவிகள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாகவும் அடுத்த ஆண்டு மேலும் 1650 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏழை எளிய மக்களின் கனவை தமது அரசு நனவாக்கி வருவதாகக் கூறிய முதலமைச்சர், புதிய திட்டங்களால் உயர்கல்வியில் மாணவர்கள் அதிகம் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரித்தார்.

மக்களிடையே தவறான தகவல்கள் பரப்பி வெற்றி பெறும் முயற்சி நடக்காது என கூறிய முதலமைச்சர், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு நிலை மோசமாகும் என குற்றம் சாட்டினார்.

தமிழகம் வளர்ச்சிப்பாதையில் வீறுநடை போடுவதாகக் கூறிய முதலமைச்சர், பொது மக்களின் ஆதரவோடு அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.