மௌனித்தார் மைத்திரி!


 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கருத்து வெளியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இந்த அறிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முற்றாக நிராகரித்துள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட பிரபலமான பலர் மீது சட்டநடவடிக்கைகளை எடுக்கும்படி பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த அறிக்கை மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தை அறிந்துகொள்ள கொழும்பின் ஊடகமொன்று முயற்சித்துள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவின் ஊடகப் பேச்சாளர், தற்போதைய சூழ்நிலையில் எவ்வித கருத்தையும் வெளியிட அவர் விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

யார் எவ்வாறான கருத்துக்களையும் வெளியிட முடியும் எனவும் எனினும் இந்த நேரத்தில் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கப்போவது இல்லையென முன்னாள் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.