சமிந்த வாஸ் மீண்டும் பந்துவீச்சு பயிற்றுநராக!


 இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுநராக சமிந்த வாஸை மீண்டும் நியமிப்பதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சமிந்த வாஸுக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவன உயர் அதிகாரிகளுக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இது தொடர்பாக இறுதித் தீர்மானம் இன்றைய தினம் (18) எடுக்கப்பட்டதும், ஸ்ரீ  லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கும் சமிந்த வாஸுக்கும் இடையேயான ஒப்பந்தம் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சுற்றுலாவுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுநராக தெரிவு செய்யப்பட்டிருந்த சமிந்த வாஸ், அத்தொடர் ஆரம்பமாவதற்கு சில தினங்களுக்கு முன்னர் அப்பதவியிலிருந்து தாம் விலகுவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.