8 வருட தடை விதிக்கப்பட்டுள்ள வீரர்கள்!


 சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி தடுப்பு விதிகளின் கீழ் ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் அணியின் வீரர்களான மொஹமட் நவீட் மற்றும் ஷய்மான் அன்வர் ஆகிய இருவருக்கும் தலா 8 வருடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடையின் படி அவர்கள் இருவரும் 8 வருடங்களுக்கு கிரிக்கெட் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடவோ அல்லது பங்குபற்றவோ முடியாது.

இரு வீரர்களுக்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்ட 2019 ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதியிலிருந்து தடை அமுலுக்கு வருவதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற ஐ.சி.சி.யின் ஆண்களுக்கான இருபதுக்கு - 20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுப்போட்டியின் போது ஊழல் மோசடி செய்ய முயற்சித்ததாக இருவர் மீதும் 219 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி தடுப்பு விதிகளில் 2 விதிகளை மீறியமை உறுதியாகிய நிலையில் இருவருர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு இவ்வாறு 8 வருட தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.