பிரதமர் மோடியின் வேண்டுகோள்!

 


உடற் தகுதியுள்ள அனைவரும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், பிரதமர் நரேந்திர மோடி முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவக்சின் தடுப்பூசியை இன்று (திங்கட்கிழமை) முதலாவதாகப் போட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், “எமது விஞ்ஞானிகளும், வைத்தியர்களும் விரைவாகச் செயற்பட்டு கொரோனாவை உலகளவில் எதிர்த்து போராட குறிப்பிட்ட சக்தியை உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்நிலையில், தகுதியுடைய அனைவரும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரதமரைத் தொடர்ந்து பல மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் இன்று தடுப்பூசியை போட்டுக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.