இலங்கை விமானப்படையின் வான் சாகச கண்காட்சி இன்று!


 இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு நிறைவையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள வான் சாகச கண்காட்சி இன்று ஆரம்பமாகிறது.

கொழும்பு – காலி முகத்திடலில் இன்று (புதன்கிழமை) முற்பகல் ஆரம்பமாகவுள்ள இந்தக் கண்காட்சி  எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

இதற்காக இலங்கை விமானப்படையினருடன் இந்திய விமானப்படையினரும் இணைந்து வான் சாகசங்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியாவின் விமானப்படை மற்றும் கடற்படையினரை பிரதிநிதித்துவப்படுத்தி 23 விமானங்கள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளன.

இலங்கை விமானப்படையின் 70ஆம் ஆண்டு நிறைவு தினம் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.