அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை நிறுத்திய ஐரோப்பிய நாடுகள்!

 ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டை, ஐரோப்பிய நாடுகள் இடைநிறுத்தியுள்ளன.

இதன்படி, ஸ்பெயின், ஜேர்மனி, இத்தாலி, போர்த்துகல், ஆஸ்திரியா, லாட்வியா, ஸ்லோவேனியா, நெதர்லாந்து, டென்னமார்க் ஆகிய நாடுகள் இந்த தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்து உள்ளன.

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டு கொண்ட முதியவர்கள் பலருக்கு இரத்த உறைவு ஏற்பட கூடிய பல சம்பவங்கள் தெரியவந்தது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிறைவடையாத விசாரணை காரணமாக ஒன்பது ஐரோப்பிய நாடுகள் முடிவை எடுத்துள்ளது.

எனினும், அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி உற்பத்தி நிறுவனம், சேகரித்து வைத்துள்ள பரிசோதனை தரவுகளின் அடிப்படையில், இரத்த உறைவு ஏற்படுவதற்கான ஆபத்து பற்றிய எந்த சான்றுகளும் இல்லை என தெரிவித்துள்ளது. இதனை ஐரோப்பிய மருத்துவ கழகம், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்டவையும் கூறியுள்ளன.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.