ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்!


 2024ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடலாம் என முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தோல்விக்கு பின்னர் முதல் முறையாக பொது மேடையில் பேசும் போது ட்ரம்ப் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

நாம் தொடங்கிய இந்தச் சிறப்பான பயணம் முடிவுக்கு வர வெகு தொலைவுள்ளது. எனக்கு புதிய கட்சியை தொடங்குவதில் விருப்பம் இல்லை.

பைடனின் நிர்வாகம் மோசமாக இருக்கப்போகிறது என்பது எமக்கு தெரியும். ஆனால், எந்த அளவு மோசமாக இருக்கப்போகிறது என்பதை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

ஆனால் 2024 அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி படுதோல்வியைச் சந்திக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.