விடுதலைப்புலிகளின் உடமைகளைத் தேடிய பொலிஸார்!

 ளிநொச்சியின் இரு வேறு இடங்களில் விடுதலைப்புலிகளின் உடமைகளைத் தேடி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பாரதிபுரம் பாடசாலைக்கு பின்பகுதியில் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் குடியிருந்ததாக கருதப்படும் இரு வேறு இடங்களில்,

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் குறித்த அகழ்வுப் பணிக்காக அனுமதி பெறப்பட்டு அகழ்வுப் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜாவின் கண்காணிப்பின் கீழ் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இரு அகழ்வுப் பணிகளிலும் எவ்விதமான பொருட்களும் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், குறித்த பணியை இடைநிறுத்துமாறு நீதவான் பணித்ததற்கமைவாக கைவிடப்பட்டது.

இதன்போது கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பலரும் அங்கு சென்றிருந்தனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.