தென்னந்தோட்டத்தில் துப்பாக்கியும் தோட்டாக்களும் மீட்பு!


 உடப்பு - பெருக்குவாட்டான் பகுதியிலுள்ள தென்னந்தோட்டமொன்றில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தன்னியக்க துப்பாக்கி ஒன்றையும் ஒரு தொகுதி தோட்டாக்களையும் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

இதன் போது சிலாபம் சிங்கபுர வீதியில் வசிக்கும் 63 வயதுடைய குறித்த தென்னந்தோட்ட உரிமையாளரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடப்பு பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.