பனிச் சரிவில் உயிரிழந்த ஒலிம்பிக் பனிச்சறுக்கு வீராங்கனை!


 2002 மற்றும் 2006 குளிர்கால ஒலிம்பிக்கில் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரான்ஸ் பனிச்சறுக்கு வீராங்கனை ஜூலி பொமகல்ஸ்கி 40 ஆவது வயதில் உயிரழந்துள்ளார்.

செவ்வாயன்று பனிச்சரிவில் சிக்குண்டு அவர் உயிரிழந்தார் என்று பிரான்ஸ் பிரான்ஸ் ஸ்கை கூட்டமைப்பு புதன்கிழமை அறிவித்தது. 

த நியூயார்க் டைம்ஸ் கருத்துப்படி, 

சுவிஸ் ஆல்ப்ஸில் உள்ள ஜெம்ஸ்டாக் மலையில் போமகால்ஸ்கி நான்கு பேர் கொண்ட குழுவுடன் பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்குண்டு உயிரழந்தாக கூறப்படுகிறது.

இந்த பனிச்சரிவில் புருனோ குடெல்லி என்ற வழிகாட்டியும் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு நபர் பனிச் சரிவில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந் நிலையில் இவர்களின் உயிரிழப்புக்கு ஒலிம்பிக் சமூகம் தனது இரங்கலை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.