சட்டமன்ற தேர்தல் : வேட்பு மனுத்தாக்கல் நாளை ஆரம்பம்!

 தமிழகம்- புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகிறது.

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ந் திகதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதையொட்டி நாளை முதல் 19 ம் திகதி வரை மனுத்தாக்கல் நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும் எனத்  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 20ம் திகதி நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெற 22ம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.