உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தில் படமாகும் 'கோப்ரா'!!

 


உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் ‘கோப்ரா’படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோப்ரா’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் விக்ரம் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவது போன்ற காட்சி படமாக்கப்படவுள்ளது. இந்த பல்கலைக்கழகம் உலகப் புகழ் பெற்றது என்பதும் இதில் பல பிரபலங்கள் படித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீநிதிஷெட்டி மற்றும் மியா ஜார்ஜ் நடித்துள்ளனர். மேலும் கேஎஸ் ரவிக்குமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் சீயான் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.