விமானத்தில் பிறந்த பெண்குழந்தை!

 


நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜெய்பூருக்கு பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணித்த பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சக பயணியான வைத்தியர் தலைமையில், விமான கேபின் குழு ஊழியர்களின் உதவியுடன், குறித்த பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளது. 

குறித்த இந்நிகழ்வு,  ஆச்சரியமூட்டும் சம்பவமாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டுவருகிறது. 

பெங்களுரிலிருந்து இன்று அதிகாலை ஜெய்ப்பூருக்கு சென்று கொண்டிருந்தபோது தங்கள் பயணி ஒருவருக்கு  பிரசவம் நடந்ததாகவும், அதில் பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது  தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரசவம் பார்த்த வைத்தியருக்கு ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.