தூண்டில் போடும் துடுப்பு திமிங்கலங்கள்!


 திமிங்கலம் நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும்.

திமிங்கலங்களில் ஒரு வகையான நீலத் திமிங்கலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது.

இவை நுரையீரல் மூலமே சுவாசிக்கின்றன. திமிங்கலங்களில் 75 வகைகள் உள்ளன.

உலகிலுள்ள உயிரினங்களுள் மிகப்பெரியதாக வளரக்கூடிய இனம் நீலத் திமிங்கலம் ஆகும்.

இது  100 அடி நீளமும் 150 தொன் எடையுள்ளதாகவும் வளரக்கூடியது.

இத்தகைய திமிங்கலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும்.

இதேவேளை ஸ்பெயின் கடற்கரை அருகே அண்மைகாலமாக திமிங்கலங்கள் வந்து செல்கின்றன.

இந்த 80 அடி நீளம் வரையான துடுப்பு இன திமிங்கலங்கள் ஆழம் குறைவான பகுதிகளில் வசிக்கும் இறால்களை உண்பதற்காக கரைக்கு வருவதாக கூறப்படுகிறது.

கடல் வாழ் உயிரினங்கள் குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனம் ஒன்று  பார்சிலோனா நகர கடற்கரை பகுதிகளில் ட்ரோன் கமராக்கள் மூலம் சுமார் 700 மணிநேரம் படம் பிடித்த போது இந்த சுவாரஸ்யமான காட்சிகள் பதிவாகியுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.