கழுகுக் குஞ்சு கோழிக் குஞ்சான கதை- கதை


விவசாயி ஒருவன் தனது நிலத்திற்கு அருகே இருந்த உயரமான பாறையில் இருந்து ஒரு கழுகு முட்டையினை வீட்டிற்கு எடுத்து வந்தான் .


அக்கழுகு முட்டையினை தன் வீட்டில், கோழி முட்டைகளோடு சேர்த்து வைத்து அடைகாக்கச் செய்தான்.

சில நாட்களுக்குப் பின்னர் கோழிக்குஞ்சுகளோடு கழுகு குஞ்சும் பொறித்தது. எல்லாக் கோழிக்குஞ்சுகளு, சகஜமாக பழகி, தாய்க்கோழியோடு இரையினைத் தேடி உண்டு கொண்டிருந்தன.

ஒரு நாள் இரை மேய்ந்து கொண்டிருந்த கழுகு குஞ்சுவிடம், ஒரு கோழிக்குஞ்சு வானத்தில் மேகத்திற்கு மேல் பறந்துகொண்டிருந்த ஒரு கழுகினைக் காட்டி, “அச்சோ..! அந்தக் கழுகினை பார்..! எவ்வளவு உயரத்தில் பறக்கின்றது.. நம்மால் அதைப்போல் பறக்க முடியாது” என்று கவலையோடு கூறியது.

அதைக் கேட்ட அந்த கழுகுக் குஞ்சும், “ஆமாம்.. நம்மால் அவ்வளவு உயரத்தில் பறக்க முடியாது...” என்றது.

கழுகு குஞ்சிடம் அந்த மேகத்தைத் தாண்டிப் பறக்கும் வலிமை இருந்த போதிலும், கோழிக்குஞ்சுகளோடு பழகியதால் தன் வலிமையை உணராது போனது.

இதைப் போலத்தான் நன்கு படிக்கக் கூடிய மாணவர்கள், உடன் படிப்பே வராத மாணவர்களோடு சேர்ந்து இலக்கை நிர்ணயிக்க முடியாமல் தோற்றுப் போய் விடுகிறார்கள்.

நம் லட்சியத்திற்கு உறுதுணையாக இருக்கும் நட்புகளோடு சேர்ந்தால் வாழ்வு வளம் பெறும். “பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்” அதேநேரத்தில் “பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் உண்ணும்” என்ற இந்த இரண்டு பழமொழிகளின் மூலமாக நாம் நம் சேர்க்கையை பொறுத்தே, நமது வாழ்வும் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை உணரலாம்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.