பச்சைப்பயறு கிச்சடி- சமையல்!

 


தேவையான பொருட்கள்:


1. பச்சரிசி - 100 மி.லி

2. பச்சைப்பயறு - 100 மி.லி

3. மஞ்சள் பொடி - 2 சிட்டிகை

4. உப்பு - தேவையான அளவு

5. நெய் - 2 சிறிய மேசைக் கரண்டி

தாளிக்க வேண்டிய பொருட்கள்:

1. கடுகு - 1 சிறிய மேசைக் கரண்டி

2. சீரகம் - 1 சிறிய மேசைக் கரண்டி

3. பிரிஞ்சி இலை - 2

4. பட்டை - 1

செய்முறை:

1. அரிசியை முதலில் நன்றாக களைந்து கொள்ளவும். அதே போல் பச்சைப் பயறை நன்றாகக் களைந்து கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் அரிசி, பச்சைப்பயறை, மஞ்சள் பொடியும் போட்டு ஒன்றாகக் கலந்து, தண்ணீர் 500 மி.லி ஊற்றி குக்கரில் வைக்கவும். ஐந்து அல்லது ஆறு விசில் வரட்டும்.

3. நன்றாக ஆறிய உடன் இக்கலவைக்கு தேவையான உப்பு போடவும்.

4. கடுகு, சீரகம், பட்டை பிரிஞ்சி இலை ஆகியவற்றை நெய்யில் தாளித்துப் போடவும்.

குறிப்பு:இதற்கு சிறுபருப்பு துவையல் நன்றாக இருக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.