அதிமுக கூட்டணி வெற்றி பெறும்!
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு டெமாக்ரசி நெட்வொர்க் மற்றும் உங்கள் குரல் ஆகிய அமைப்புகள் இணைந்து தமிழகம் முழுவதும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் கருத்துக் கணிப்பை நடத்தின. அதன் முடிவை நேற்று வெளியிட்டுள்ளது.
இதன்படி அதிமுக கூட்டணி 122 இடங்களிலும், திமுக கூட்டணி 111 இடங்களிலும், ஏனைய கூட்டணி ஓரிடத்திலும் வெல்லும் என தெரிவித்திருக்கிறது.
பயிர் கடன் தள்ளுபடி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2,500 உள்ளிட்ட பல மக்கள் நலத்திட்டங்கள், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு, ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் நிலையான ஆட்சி ஆகிய சாதகமான அம்சங்களால் அதிமுக கூட்டணிக்கு 122 இடங்கள் கிடைக்கக்கூடும் என்று தெரிவித்திருக்கிறது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பாணியைத் தொடர்ந்து பின்பற்றுவது, மக்களவை தேர்தலை போல் அல்லாமல் கூட்டணி கட்சிகளின் முழுமையான ஒருங்கிணைப்பின்மை, இளம்வயது வாக்காளர்களை குறிவைத்து நவீன உத்தி பிரச்சாரம் ஆகியவற்றால் திமுக கூட்டணி 111 இடங்களை வெல்லும் என்று தெரிவித்திருக்கிறது. இவ்விரண்டு கட்சிகளை விட ஏனைய கட்சிகள் ஓரிடத்தில் வெல்லும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.
கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம், நடு மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய மண்டலம் என ஐந்து மண்டலங்களாகப் பிரித்து வாக்காளர்களிடம் கருத்துகணிப்பு நடத்தியதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

.jpeg
)





கருத்துகள் இல்லை