தேயிலை மலைப் பகுதியொன்றில் ஆணின் சடலம் கண்டெடுப்பு!
ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டம் சித்தரவத்தைப் பிரிவு தேயிலை மலைப் பகுதியில் ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் கண்டெடுக்கப்பட்டதாகவும் 55 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இது கொலையா, தற்கொலை என்பது தொடர்பாக விசாரணை இடம்பெற்று வருவதுடன் மரண விசாரணைகளின் பின்னர் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை