பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்-மீறினால் தண்டனை!

 


புத்தாண்டு காலப்பகுதியில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

புத்தாண்டுக்காக பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் பொதுச் சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு செல்கின்ற போது முகக்கவசம் அணிந்து செல்லுமாறு கேட்டுள்ளார்.

ஆடைகளை கொள்வனவு செய்வதற்கு பொது மக்கள் ஆடை விற்பனை நிலையங்களுக்கு செல்கின்ற போது ஆடை விற்பனை உரிமையாளர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதோடு ஆடைகளை கொள்வனவு செய்வதற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கை கழுவுவதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.

கடைகளுக்கு முன்னால் சுகாதார வழிமுறைகளை மக்களை கடைப்பிக்கச் செய்வதற்கு பொறுப்பான ஒருவரை நியமிப்பதோடு, கை தொற்று நீக்கியை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுள்ளார்.

இது தொடர்பாக சகல சுகாதார வைத்தியதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்குறித்த அறிவுறுத்தல்களை பின்பற்றாத ஆடை விற்பனை நிலையங்கள் மூடப்படுவதோடு, அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.