சிறைச்சாலைக்குள் மர்மப் பொதியை வீசிவிட்டு தப்பி ஓடிய நபர்!

 


களுத்துறை சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதியினை சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

களுத்துறை சிறைச்சாலையின் மதிற்சுவருக்கு வெளியே இருந்து நபரொருவர் பொதியொன்றை வீசிவிட்டு ஓடிச்செல்வதை சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் கவனித்துள்ளனர்.

அதனையடுத்து சிறைச்சாலையின் சி பிரிவின் உட்புறத்தை பரிசோதித்தபோது அங்கே புற்களால் மறைக்கப்பட்ட பொதியொன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அப்பொதியினை பரிசோதனையிட்டபோது அதனுள் இருந்து கையடக்க தொலைபேசியொன்றும், கையடக்க தொலைபேசிக்கான மின்கலம் ஒன்றும் 8 புகையிலை துண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட மேற்படி பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை வடக்கு காவல் துறையினரிடம் கையளிக்கப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.