தமிழைக் கற்க முடியவில்லை: பிரதமர் வருத்தம்!


 தமிழ் மொழியை கற்கும் முயற்சியில் என்னால் வெற்றி பெற முடியவில்லை என்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும், தமிழில் தான் தனது உரையைத் தொடங்குவார். கடந்த முறை சென்னைக்கு வந்த போது, வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு’ என தமிழில் பேசினார். அப்போது, "வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்" என்ற ஔவையார் எழுதிய பாடலை மேற்கோள் காட்டினார்.

அதுபோன்று பாரதியார் மற்றும் திருவள்ளுவரின் படைப்புகளையும் பிரதமர் குறிப்பிட்டுப் பேசுவது வழக்கம். பிப்ரவரி 25ஆம் தேதி கோவை வந்த பிரதமர், ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்ற திருக்குறளைக் குறிப்பிட்டுப் பேசினார்.

இந்நிலையில், இன்று (பிப்ரவரி 28) 74வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பல ஆண்டுகளாக முதல்வராகவும், தற்போது பிரதமராகவும் இருக்கும் உங்களுக்கு எதையாவது இழந்துவிட்டோம் என்ற எண்ணம் இருக்கிறதா என 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

உலகின் தொன்மையான மொழி தமிழ். தமிழ் இலக்கியங்கள் அழகானது. தமிழ் மொழியைக் கற்க என்னால் போதிய முயற்சி எடுக்க முடியவில்லை. முயற்சி செய்தாலும் அதில் வெற்றி பெற முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது” என்று கூறினார்.

-பிரியா

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.