முள்ளிவாய்க்காலின் பின்னான கோட்பாடு!!

 


தூசிடிடேஸ் – சன்சூ – கௌடில்யர் – வேலுப்பிள்ளை பிரபாகரன். 

புலிகள் என்றுமே தம்மை தோல்வி மனநிலைக்குள் உட்புகுத்திக் கொள்ளவில்லை. கடைசி கணம் வரை அவர்கள் வாயிலிருந்து ‘தோல்வி’ மற்றும் ‘சரணடைவு’ என்ற வார்த்தை பதங்கள் உதிரவேயில்லை.

அதை கடைசி கணத்திலும் அவர்கள் வாயிலிருந்து புடுங்கிவிட வேண்டும் என்பதில் உலக அரச பயங்கரவாதிகள் பெரும் பிரயத்தனப்பட்டார்கள்.

ஆனால் தலைவர் தெளிவாகவே இருந்தார். வெற்றி – தோல்விகளுக்கு அப்பால் அடுத்த தலைமுறைக்கு தெளிவான வரலாற்றை விட்டுச் செல்வதிலேயே குறியாக இருந்தார்.

இன்றைய நவீன அரசுகளின் இராஜதந்திர கொள்கைவகுப்பாக்கம் மற்றும் வெளியுறவுக் கொள்கை என்பது பண்டைய மூன்று தத்துவங்களின் அடிப்படையிலேயே வரையப்படுகின்றன.

கிரேக்க ஞானி தூசிடிடேஸ்,

சீனப் போர்க்கலை வல்லுனர் சன்சூ மற்றும் இந்தியாவின் கௌடில்யர் ஆகியோரது தத்துவங்களே இவை மூன்றுமாகும்.

ஆச்சர்யப்படத்தக்க வகையில் இவை இராணுவ – படைத்துறை உத்திகளிலிருந்து தோற்றம் பெற்று அரசுகளுக்கிடையேயான இராஜதந்திர கொள்கை வகுப்பாக்கமாக வடிவ மாறுதலுக்குள்ளாகுகின்றன.

இதுவே இந்த மூவர் பட்டியலில் நான்காமவராக வேலுப்பிள்ளை பிரபாகரனை வரலாறு அடையாளம் காட்டக் காரணமாகிறது.

ஸ்பாற்றாவுக்கும் ஏதன்சுக்கும் இடையில் கி.மு.404 – 431 காலப்பகுதியில் நடந்த போர் பெலோபோனீசியன் போர் (Peloponnesian War) என்று வரலாற்றில் அடையாளப்படுத்தப் பட்டுள்ளது.

இந்தப் போரின் தோல்வியிலிருந்தே ‘மனித குல வரலாற்றின் சொத்து’ என்று இன்றளவும் வர்ணிக்கப்படும் கோட்பாட்டை கிரேக்க ஞானி தூசிடிடேஸ் எமக்கு தந்திருக்கிறார்.

வரலாறு எவ்வளவு ஆச்சர்யமானது. மீளவும் பிரபாகரனுக்காக வழிவிட்டிருக்கிறது.

பெலோபோனீசியன் போர் தோல்வியின் பின் உருவாகிய ஒரு கோட்பாடு போல், இன்று முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியினூடாக பிரபாகரனியம் மற்றும் நந்திக்கடல் கோட்பாடுகள் வழியே அவருக்கு அழியாப் புகழை தந்திருக்கிறது.

இந்தியா தனது கொள்கை வகுப்பாக்கத்தில் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தையே பின்பற்றுவதால்தான் உள்ளக அளவிலும் சரி வெளியக அளவிலும் சரி அழிவு அரசியலை கையிலெடுக்கிறது.

2009 தமிழின அழிப்பு இதற்கு சிறந்த உதாரணம்.

ஏனென்றால் கௌடில்யர் குழப்பம் விளைவித்தல், ஒற்றுமையை குலைத்தல், நோய்க் கிருமிகளை பரப்புதல் எல்லாம் இராஜதந்திரமாக முன்வைக்கிறார்.

இந்த இடத்தில்தான் பிரபாகரனியம் அதி முக்கியத்துவம் பெறுகிறது.

அவர் நினைத்திருந்தால் கடைசி நேரத்தில் சிங்கள தேசத்தை நிர்மூலம் செய்திருக்கலாம்.

ஆனால் அவர் இந்த இனத்தினுடைய வரலாற்றை மட்டுமல்ல, இந்த நூற்றாண்டின் போராடும் இனங்களின் ஒட்டு மொத்த பிரதிநிதியாய் போராடும் இனங்களின் வரலாற்றைத் தெளிவாக எழுதுவதிலேயே குறியாக இருந்தார்.

இன்றுவரை சிங்களம் மட்டுமல்ல

இந்திய, மேற்குலக வல்லுனர்கள் கூட மிரண்டு போய் நிற்கும் இடம் இது.

உலகின் போராடும் தேசிய இனங்களை அழித்து / நீர்த்துப் போகச் செய்யும் பல உத்திகள் உலக பயங்கரவாத அரசுகளினால் பரீட்சித்து பார்க்கப்பட்ட களம்தான் தமிழீழம்.

எப்படியாவது தலைவரை அடிபணிய வைப்பதனூடாக அதை ஒரு வெற்றிச் சூத்திரமாக மாற்ற முயன்றார்கள்.

தலைவர் அதை முன்னுணர்ந்தவராக ஆட்டத்தின் போக்கையே மாற்றியமைத்தார்.

அவர் அதனூடாக ஒடுக்கப்பட்ட இனங்கள் சார்ந்த ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கினார்.

கிரேக்க ஞானி தூசிடிடேஸ்,

சீனப் போர்க்கலை வல்லுனர் சன்சூ மற்றும் இந்தியாவின் கௌடில்யர் வரிசையில் வேலுப்பிள்ளை பிரபாகரன் இடம் பிடிப்பதற்கும் அதேநேரம் அவர்களிடமிருந்து முற்றாக வேறுபடுவதற்கும் இதுதான் காரணம்.

பெலோபோனீசியன் போர் தோல்வியின் பின் உருவாகிய ஒரு கோட்பாடு போல், இன்று முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியினூடாக பிரபாகரனியம் மற்றும் நந்திக்கடல் கோட்பாடுகள் வழியே தலைவர் பிரபாகரன் மனித குல வரலாற்றின் நவீன கோட்பாட்டாளனாக தன்னை நிறுவியுள்ளார்.


பரணி கிருஸ்ணரஜனி

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.