அம்பிகை அம்மாவின் போராட்டமும், அவர்கொண்ட மனத்துணிவும் வணக்கத்துக்குரியது"!!


 பிரித்தானியாவில் அறவழியில் பசியிருந்து போராடும் அம்பிகை அம்மாவின் போராட்டம் பற்றி "நவீன Diaspora" அமைப்புகள் வாய்திறக்காதிருப்பதை அவதானித்தீர்களா..? அவதானித்திருந்தால் உங்களுக்கு இரத்தம் அழுத்த நோய் வரவாய்ப்பில்லை. 

2009 இல் நந்திக்கடலில் புலிகள் மௌனித்தபிறகு ,  உருவான  "நாங்கள்தான் இயக்கம்" அமைப்பின் தூண்கள், சிலிப்பர் கட்டைகளிடம் " ஏனப்பா அம்பிகை அம்மாவின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவில்லை" என்று கேளுங்களேன். மேலிடம் முடிவு தரவில்லை என்பார்கள்.  எங்கடா இருக்கு மேலிடம் என்று கேட்டுவிடாதீர்கள். ஏதாவது ஓர் ஐரோப்பிய நாடொன்றைச் சொல்லி "நிலா நிலா ஓடி வா" என்று பாடி உங்களுக்கு இடியப்பம் ஊட்டுவார்கள்.

2009 இற்குப்பிறகு ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் அவை சார்ந்த அமைப்புகள் அனைத்தும் வெறும் சோளக்காட்டு பொம்மைகள்தான். மாவீரர்நாளும், இனஅழிப்பு நாளும் இல்லையென்றால் இவர்களெல்லாம் தொழிலுக்கு என்ன பண்ணுவார்கள் என்று யோசித்திருக்கிறேன். மக்களின் அறவழிப் போராட்டங்களை அரவணைக்கத் தெரியாத அமைப்புகள் இருந்தென்ன , இறந்தென்ன எல்லாமே ஒன்றுதான்.

2009 இல் யேர்மனியில் உண்ணாநோன்பினை ஆரம்பிப்பதற்கான முதல்நாள் கையுயர்த்திய பெருந்தகைகளில் சிலர், மறுநாள் நெஞ்சுக்குத்து மற்றும் குஞ்சுக்குத்து காரணங்களால் கழன்றுவிட, நானும் இன்னும் 9 உறவுகளுமாக உண்ணாநோன்பை ஆரம்பித்தோம். அதைக் காயடித்து மழுப்பாமல் அரவணைத்துப் போராட்டமாக்கியது அப்போது புலிகளின் வல்லமையெனில் மிகையில்லை.  அப்போது இருந்ததுதான் உண்மையான "மேலிடம்". 

அம்பிகை அம்மாவின் போராட்டமும், அவர்கொண்ட மனத்துணிவும் வணக்கத்துக்குரியது. தம்மைக் கேட்டு ஆரம்பிக்கவில்லை என்பதற்காக "தம்" கட்டி அமைதிபேணும் வெள்ளைச்சட்டைகள் மிகுந்த பரிதாபத்திற்குரியன. இந்தப் பெண்கள் அமைப்பெல்லாம் இன்னும் இருக்கா இல்லையா எனத்தேடவேண்டியிருக்கிறது. சிங்கள நண்பர்கள் சொல்வதைப்போல, 2009 இற்குப்பின்பு  புலிகளின்  பெயரைச்சொல்லி அதிகாரம் பண்ணுறவன் அத்தனை பேருமே "Totally failed". 

"ஒற்றுமையே பலம், ஒண்டுக்கடிச்சா நலம்" என்று யாராவது இனி நமக்கு வகுப்பெடுங்கடா ...அப்ப இருக்கு உங்களுக்கு மீதி,,,

"தேவன் அமைப்பை ஒடைக்கிறார், அப்பளத்தை  நொறுக்கிறார்" என்று கெளம்புறவனெல்லாம் முதலில இதுக்குப் பதில்சொல்லீற்றுக் கிளம்பிவாங்கடா..

" உடைக்கிற அளவுக்கு  உங்களட்ட என்னடா இருக்கு..?"

-தேவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.