எத்தியோப்பியாவில் துப்பாக்கி தாக்குதல்களில் 30 பேர் பலி!


 எத்தியோப்பியாவின் மத்திய ஒரோமியா பிராந்தியத்தில் அமைந்துள்ள கிராமமொன்றில் துப்பாக்கி ஏந்தியவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் மேலும் 12 பொதுமக்கள் காயமடைந்ததாகவும் எத்தியோப்பிய அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

தாக்குதலானது மத்திய அரசாங்கத்திற்கு சவால் விடும் வகையில் இன வன்முறையை தூண்டியுள்ளது.

தாக்குதலை நேரில் கண்ட 50 வயதான முதியவர் ஒருவர், நாங்கள் கார்களை பயன்படுத்தி இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் சென்றதாகவும், 30 பேரை அடக்கம் செய்ததாகவும் கூறினார்.

அதேநேரம் முதியவரும் அவரது குடும்பத்தினரும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு அருகிலுள்ள அரசாங்க அலுவலகத்திற்கு தப்பி ஓடிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.