இளைஞனை வழிமறித்த கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பியோட்டம்!


 யாழ்.கல்லுண்டாய் பகுதியில் இளைஞனை வழிமறித்த கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.

குறித்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.நகரப்பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றும் குறித்த இளைஞன்

கடமை முடித்து கல்லுண்டாய் வீதி ஊடாக சென்று கொண்டிருக்கும் போது இனந்தெரியாத நபர்கள் வழிமறித்துத் தாக்கியுள்ளனர்.

சம்பவத்தை அறிந்து தாக்குதலுக்கு இலக்கான இளைஞனின் நண்பன் அராலியில் இருந்து வருகைதந்த நிலையில் அவனை அராலி பாலத்தடியில் வழிமறித்த இனந்தெரியாத நபர்கள் கத்தியால் குத்தியுள்ளனர்.

சம்பவத்தால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.