இலங்கையில் 10,000 வீடுகளை அழிக்க திட்டம்!

 


நாடளாவிய ரீதியில் அபாய வலயங்களில் உள்ள சுமார் 10,000 வீடுகளை அகற்றிவிட திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் அபாய வலயங்களில் உள்ள சுமார் 10,000 வீடுகள் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இவ்வாறு வீடுகளில் இருந்து அகற்றப்படுவோருக்கு வேறு வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணிகளை பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட பகுதிகளில் காணிகளை பெறுவதில் சில சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவற்றை நிவர்த்தி செய்து , வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சில பகுதிகளில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான காணிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சமல் ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.