கோப்பாயில் காணி உரிமையாளர் மீது கடுமையான தாக்குதல்!

 


யாழ்.கோப்பாயில் காணியை சுற்றி அடைக்கப்பட்டு இருந்த வேலிக் கதியாலை வெட்டி எரியூட்டிய போது அதனை தடுத்த காணி உரிமையாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோப்பாய் மத்தி நீமசிட்டி பகுதியில் நேற்று அதிகாலை 8 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஒருவர் வேலிக் கதியாலை வெட்டி எரித்துக் கொண்டிருந்தார். இதன் போது அதனை பார்த்த காணி உரிமையாளர் எரியூட்டியவருடன் முரண்பட்டார்.

இம் முரண்பாடு பின்னர் கைலப்பாக மாறியது. இதன்போது வேலிக் கதியாலை வெட்டி எரித்தவருடன் இருந்த கும்பல் காணி உரிமையாளர் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.

ஒருவாறு அந்த கும்பலில் இருந்து காணி உரிமையாளர் தப்பி ஓடி பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.