யேர்மனி டீசீல்டோர்ப் நகரில் பேராயர் கலாநிதி இராயப்பு யோசேப் அவர்களின் நினைவேந்தல்!

 மன்னார் மறைமாவட்ட முன்னாள் அதிவணக்கத்துக்குரிய பேராயர் கலாநிதி இராயப்பு யோசேப் அவர்களின் நினைவாக டுசெல்டோவ் நகர மாநில அவை ( Landtag ) முன்றலில் இன்று 10.04.2021 நினைவு நிகழ்வு நடபெற்றது. நிகழ்வில், பொது ஈகைச்சுடரினை யேர்மன் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் பங்குத்தந்தை நிரூபன் அவர்கள் ஏற்றிவைத்தார். முதன்மைச் சுடரினை பங்குத்தந்தை அல்பேர்ட் கோலன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து பேராயர் கலாநிதி இராயப்பு யோசேப் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மக்கள் சுடர், மற்றும் மலர்களால் வணக்கம் செலுத்தினர்.

நினைவு உரைகளை யேர்மன் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் பங்குத்தந்தை நிரூபன் அவர்களும் பங்குத்தந்தை அல்பேர்ட் கோலன் அவர்களும் ஆற்றியிருந்தனர். அவர்களைத் தொடர்ந்து தமிழ்ப் பெண்கள் அமைப்பின் சார்பாக திருமதி கலா யெயரடனம் அவர்களும் தமிழர் விளையாட்டுத்துறை சார்பாக திருமதி ஜெயயசோதா அவர்களும் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர். சிறப்புரையை தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் வடமாநிலப் பொறுப்பாளர் திரு நடராஜா திருச்செல்வம் அவர்களும் ஆற்றினார். கொட்டும் மழையிலும் தமிழ்மக்களுக்கான நீதியின் குரலாக ஒலித்த அதிவணக்கத்துக்குரிய பேராயர் கலாநிதி இராயப்பு யோசேப் அவர்களுக்கான வணக்கத்தை செலுத்தினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.