ஈழத்து குருசாமிகள் ஒன்றியம் அங்குரார்ப்பணம்!
ஈழத்து குருசாமிகள் ஒன்றியம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், ஈழத்து சபரிமலை ஐயப்பன் தேவஸ்தான மண்டபத்தில் சிவ சிரிக்கி ஹரிஹரசுதன் சிவாச்சாரியார் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
பிரதம விருந்தினராக புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சிவகுரு ஆதீனம் வேலன் சுவாமிகள் உட்பட ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை