யாழ்.திருநெல்வேலி - பாரதிபுரம் தொடர்ந்தும் முடக்கப்படும் அபாயம்!


 முடக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி - பாரதிபுரம் கிராமத்தில் மேலும் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார்.

இன்றைய தினம் 643 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடமாகாணத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன்படி யாழ்.மாவட்டத்தில்  திருநெல்வேலி  - பாரதிபுரம் கிராமத்தில் 5 பேருக்கும்,

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களை சேர்ந்தவர்கள் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.