இளைஞர், யுவதிகளுக்கு தனியார் நிறுவனங்களில் தொழில் வாய்ப்பை ஈட்டி தருவதற்கான நேர்முக பரீட்சை இன்று நடைபெற்றது.!


தொழில் வாய்ப்பை எதிர்பார்க்கும் மலையக இளைஞர், யுவதிகளுக்கு தனியார் நிறுவனங்களில் தொழில் வாய்ப்பை ஈட்டி தருவதற்கான நேர்முக பரீட்சை இன்றும், நாளையும் கொட்டக்கலை CLF வளாகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

மேலும், எதிர்காலத்திலும் தனியார் துறைகளில் தொழில் புரிய விரும்பும் விண்ணப்பதாரிகள் இது போன்ற நேர்முக பரீட்சைகளில் இணைத்துக் கொள்வதற்கான நடைமுறைகளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இளைஞர் அணி மேற்கொண்டு வருகிறது.
இதன்போது வருகைதந்திருந்த விண்ணப்பதாரிகளின் கல்வி தகைமைக்கு கல்வித் தகைமைக்கு ஏற்ப தொழில் துறைகளுக்கு நேர்முகத் தெரிவு இடம்பெறுகிறது.
இன்று ஆரம்பமான முதல் நாள் நேர்முக தேர்வில் 600 ற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.